Thursday, October 3, 2013

இன்று தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்? சீமாந்திராவில் வன்முறை- பதற்றம்!

தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று வெளியான தகவலால் சீமாந்திராவில் வன்முறை வெடித்து பதற்றம் நீடித்து வருகிறது. ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. 

ஆனால் இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பி 2 மாத காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட இருக்கிறது என்று தகவல் வெளியானது. 

இதனால் சீமாந்திரா போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர்களின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன. காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தெலுங்கானா ஆதரவு எம்.பிக்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதனால் அனந்தபூர், திருப்பதி, விசாகப்பட்டினம், நெல்லூர் உள்ளிட்ட சீமாந்திராவில் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/protests-break-in-seemandhra-over-telangana-issue-184677.html

No comments:

Post a Comment