Thursday, October 10, 2013

கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள்: தூத்துக்குடியில் பயங்கரம்!

கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வராக சுரேஷ் என்பவர் இருந்து வந்தார்.

இந்நிலையில், கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், முதல்வர் சுரேஷை இன்று காலை வெட்டிக் கொன்றனர்.

இது குறித்து வல்லநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் இருந்து மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களே கல்லூரி முதல்வரை படுகொலை செய்துள்ள சம்பவம் தூத்துக்குடி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment