Tuesday, October 8, 2013

தேர்தல் சீர்திருத்தங்கள்.. உங்க வேலை இல்லை..: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசின் கொள்கை முடிவு... அது உச்சநீதிமன்றத்தின் வேலை அல்ல என்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்கக் கூடாது, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற உரிமை வாக்காளருக்கு உண்டு, யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு கொடுக்க வேண்டும் என்று அதிரடியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது. 

இத்தகைய உத்தரவுகள் அரசியல்வாதிகளுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஒன்றுபட்டு நிற்கின்றன. 

இந்நிலையில் தண்டனை பெற்ற எம்.பி.,எம்.எல்.ஏக்கள் தகுதி இழப்பு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் பாராஸ் குஹட் நேற்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்க்கல் செய்தார். 

அதில் குற்றப் பின்னணியுடைய மக்கள் பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அத்தகைய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. 

அரசின் கொள்கை முடிவுகள் என்பவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்குமேயானால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக 6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஆர்.எம்.லோதா, ஆர்.கே.சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/electoral-reforms-not-your-job-govt-tells-supreme-court-184987.html

No comments:

Post a Comment