Saturday, October 5, 2013

பெட்ரோல் பங்குகளை மூடினால் ரூபாய் மதிப்பு எப்படி உயரும்?: மோடி கேள்வி

நாட்டின் பெட்ரோல் பங்குகளை இரவில் மூடிவிட்டால் ரூபாய் மதிப்பு எப்படி உயரும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய மோடி, மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த போது இரவு நேரங்களில் பெட்ரோல் பங்குகளை மூடிவிடலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. 

அதெப்படி பெட்ரோல் பங்குகளை இரவு நேரத்தில் மூடிவிட்டால் ரூபாய் மதிப்பு உயர்ந்துவிடும்? நாட்டின் தற்போதைய மோசமான பொருளாதார நிலைமைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் பொறுப்பு என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/how-would-shutting-petrol-pumps-contain-rupee-fall-asks-modi-184792.html

No comments:

Post a Comment