Thursday, October 10, 2013

நாங்க காம்ப்ரமைஸ் ஆகிட்டோம்- படம் வெற்றி பெற சப்போர்ட் பண்ணுங்க! -பலே நஸ்ரியா

நய்யாண்டி பட விவகாரத்தில் நாங்கள் சமரசமாகிவிட்டோம். படம் சிறப்பாக வந்துள்ளது. வெற்றி பெற சப்போர்ட் பண்ணுங்க, என்று நடிகை நஸ்ரியா கூறியுள்ளார். 

கடந்த சில தினங்களாக நய்யாண்டி பட இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிர்வேல் ஆகியோர் மீது, தன் அனுமதி இல்லாமல் தனக்கு பதிலாக டூப் வைத்து தொப்புள் காட்சியை எடுத்துவிட்டதாக புகார் கூறிவந்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். இந்த நிலையில், நேற்று திடீரென சமரசமாகிவிட்டதாக அறிவித்தார் நஸ்ரியா. 

இயக்குநர் சற்குணத்திடமும் நஸ்ரியாவும் அவர் தந்தையும் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்பட்டது. 

நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த நஸ்ரியா, "இந்தப் படத்தின் ட்ரைலர் மட்டும் பார்த்துவிட்டுத்தான் நான் புகார் கொடுத்தேன். ஆனால் படத்தை நேற்றுப் பார்த்தேன். மிகச் சிறப்பாக வந்துள்ளது. எந்தக் காட்சியும் ஆட்சேபணைக்குரியதாக இல்லை. படம் பார்க்காததால்தான் நான் புகார் தரவேண்டியதாகிவிட்டது. ஒரு கம்யூனிகேஷன் காரணமாக இப்படியெல்லாம் ஆகிவிட்டது. 

என்னிடம் பர்மிஷன் கேட்காமல் டூப் போட்டதுதான் பிரச்சினை. இப்போது அந்தக் காட்சியும் ட்ரைலரில் இல்லை. எனவே நாங்கள் சமரசமாகிவிட்டோம். அதைச் சொல்லத்தான் உங்களை அழைத்தோம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். அதனால் எல்லாரும் பார்த்து சப்போர்ட் பண்ணுங்க," என்றார். 

அவருடன் தயாரிப்பாளர் கதிரேசனும் வந்திருந்தார். கூடவே நஸ்ரியாவின் வக்கீலும் வந்தார். இயக்குநர் சற்குணமோ, ஹீரோ தனுஷோ வரவில்லை.

No comments:

Post a Comment