Thursday, October 10, 2013

லிபிய பிரதமர் அலி ஜைடன் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்டார்

லிபிய பிரதமர் அலி ஜைடன் திரிபோலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

லிபிய பிரதமர் அலி ஜைடன் திரிபோலியில் உள்ள கொரிந்தியன் ஹோட்டலில் இருந்தபோது அங்கு வந்த ஆயுதம் ஏந்திய சிலர் அவரை கடத்திச் சென்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அவரை யாருக்கும் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அலியை கடத்தியவர்கள் முன்னாள் போராளிகள் என்று லிபிய அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள போராளிகளை தடுத்து நிறுத்த உதவி செய்யுமாறு மேற்கத்திய நாடுகளை அலி நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டார். ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவே தங்கள் நாடு பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

கடாபி அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு நாட்டின் சில பகுதிகளை தங்கள் பிடியில் வைத்திருக்கும் பழங்குடியின போராளிகள் மற்றும் இஸ்லாமிய போராளிகளை அடக்க லிபிய அரசு போராடி வருகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/international/libyan-pm-ali-zeidan-kidnapped-armed-men-185121.html

No comments:

Post a Comment