2013ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு வ்நது செட்டிலானவர்.
ஸ்வீடனில் இந்த அறிவிப்பை நோபல் தேர்வுக்குழுத் தலைவர் கோரன் ஹான்சன் வெளியிட்டார். அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ரோத்மென், ராண்டி செக்மேன் ஆகியோருக்கும், ஜெர்மனியிலிருந்து 1980ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து செட்டிலான தாமஸ் சுடோஃப் என்ற விஞ்ஞானிக்கும் பரிசு கிடைத்துள்ளது.

இவர்கள் மூவரும் 2013 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசினை பெற்றுள்ளனர். மனித செல்களின் நகர்வை கட்டுப்படுத்துவது எது என்பது தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 7.7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த பரிசு மூன்று பேருக்கும் சமமாக பிரித்தளிக்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை 201 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த நோபல் பரிசு வென்ற 201 பேரில் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.in/news/international/u-s-based-trio-wins-nobel-prize-medicine-184920.html
Read more at: http://tamil.oneindia.in/news/international/u-s-based-trio-wins-nobel-prize-medicine-184920.html
No comments:
Post a Comment