மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கடுமையான ஆட்சேபனையை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு நிராகரித்துள்ளது.
ப.சிதம்பரத்தின் எதிர்ப்பையும் மீறி, இந்திய அடிப்படைக் கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.பி. நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரத்தை இந்த நியமனம் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
லண்டநைச் சேர்ந்த ஈக்விட்டி நிறுவனமான 3ஐ என்ற நிறுவனத்தின் பங்குதாரரான தீபக் பக்லாவை இந்தப் பதவிக்கு நியமிக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார் ப.சிதம்பரம். ஆனால் அதை நியமனக் குழு ஏற்காமல் நய்யாரை நியமித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சரவை நியமனக் குழு, நய்யாரின் பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
நய்யார் தற்போது ஐஐஎப்சிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயலதிகாரியாக இருந்து வருகிறார். இது அரசு நிதி நிறுவனம் ஆகும். மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார். இவரை இப்பதவிக்கு நியமிக்க வேண்டாம் என்று கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் ப.சிதம்பரம்.
அதில், தீபக் பக்லாவை இப்பதவிக்கு பரிசீலிக்குமாறு கோரியிருந்தார். ஆனால் பக்லாவை ஒதுக்கி விட்டு, நய்யாரை நியமித்துள்ளது அமைச்சரவை நியமனக் குழு. பிரதமரின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த முடிவை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://tamil.oneindia.in/news/india/sb-nayar-named-iifcl-chief-despite-finance-minister-chidambaram-184955.html
Read more at: http://tamil.oneindia.in/news/india/sb-nayar-named-iifcl-chief-despite-finance-minister-chidambaram-184955.html
No comments:
Post a Comment