குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆந்திர மாநிலம் புத்தூரில் சிக்கிய பிலால் மாலிக் தெரிவித்துள்ளான்.
ஆந்திர மாநிலம் புத்தூரில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிலால் மாலிக்கின் உறவினர் ஜபார் என்பவர் அருகில் உள்ள மற்றொரு தெருவில் வசிப்பது தெரியவந்தது. அவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது அவர் ஏற்கெனவே தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் உதவியுடன் தமிழக சிபிசிஐடி டிஜிபி நரேந்திரபால் சிங், பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. அன்பு, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ரூபேஸ் குமார் மீனா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழு பிலால் மாலிக் முன்னிலையில் அந்த வீட்டை சோதனையிட்டது.
அப்போது அந்த வீட்டிலிருந்து நவீன ரக துப்பாக்கி ஒன்றும் லேப்டாப் பேக் வடிவில் இருந்த ஒரு நவீன ரக வெடிகுண்டு கைப்பற்றியது. இது குறித்து பிலால் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பேக் வடிவிலான வெடிகுண்டு மனித வெடிகுண்டாக பயன்படுத்தக் கூடியது என்றும் மேலும் ரிமோட் அல்லது செல்போன் மூலம் சில கி.மீ. தொலைவில் இருந்து இயக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்த குண்டை எங்கு வைக்க திட்டமிட்டிருந்தனர் என்ற கோணத்தில் விசாரித்தனர்.
அப்போது மாலிக் சென்னை வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதைத் தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த வெடிகுண்டின் தொழில்நுட்பம் குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/bilal-admit-plot-on-narendra-modi-with-human-bomb-184894.html

No comments:
Post a Comment