பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஊடகங்களால் உருவாக்கப்பட்டவர்தானே தவிர வலுவானவர் அல்ல என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், நேரு, இந்திரா பரம்பரையில் வந்த ராகுல் காந்திதான் அடுத்த காங்கிரஸ் தலைவர். இளைஞர்களுக்கு வழிவிடக் கூடிய காலம் வந்துவிட்டது.
நாங்கள் இப்போது வாஜ்பாயை எதிர்கொள்ளவில்லை. வாஜ்பாய் மற்றும் அத்வானியைப் போல நரேந்திர மோடி அப்படி ஒன்றும் வலுவான பிரதமர் வேட்பாளரும் அல்ல. அவர் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட நபர். தற்போது ஊழல்தான் பிரதான பிரச்சனை. பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத்தில் ஊழல் பிரச்சனை இருக்கிறது.
இது தொடர்பாக பாஜகவுடன் இதுவரை விவாதம் நடத்தவில்லை. இனி நடைபெறப் போகும் விவாதங்கள் ஹிந்தியில் மட்டும் இருக்காது. தமிழ், தெலுங்கு, அசாம், பெங்காலி மொழிகளிலும் இருக்கும்.. நிச்சயமாக நீங்கள் ஒரு வேறுபாட்டை காண்பீர்கள் என்றார் அவர்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/modi-is-not-stronger-candidate-than-vajpayee-advani-184944.html
Read more at: http://tamil.oneindia.in/news/india/modi-is-not-stronger-candidate-than-vajpayee-advani-184944.html
No comments:
Post a Comment