Need Websites?

We, QuickBizTech have 8 Years of Exp in Web development in PHP and hosting. Skills: Photoshop, Designing, Core PHP, MySql, Joomla, Wordpress, Drupal, Magento, phpBB, Opencart, Smarty, Google API, JQuery, Charts, oAuth, SEO, Payment Gateways.


Please contact us for any kind of websites to be developed, upgraded, migrated. Reach our team for your dream website @QuickBizTech

Tuesday, October 8, 2013

இரண்டு நாட்களில் 2 முறை சோதனை செய்யப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை இரண்டு நாட்களில் இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை ஒடிஷா மாநிலத்தில் உள்ள சந்திபூர் ஏவுதளத்தில் நேற்று காலை நடந்தது. இந்த சோதனையின்போது ஏவுகணை இலக்கை சரியாகத் தாக்கியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அதே ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.20 மணிக்கு பிரித்வி 2 ஏவுகணை சோதனை மீண்டும் நடத்தப்பட்டது. இந்த சோதனையும் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 2 நாட்களாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இந்த ஏவுகணை 500 முதல் 1,000 கிலோ வரையிலான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிமீ தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் சக்தி கொண்டது. ஏற்கனவே ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பிரித்வி 2 ஏவுகணையில் அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து சோதனை செய்யப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/prithvi-ii-successfully-test-fired-for-second-time-in-two-days-184997.html

No comments:

Post a Comment